பெட்ரோல் கலால் வரியை ரூ.18.42 உயர்த்தி - ரூ.8 மட்டுமே குறைத்து மத்திய அரசு மக்களை முட்டாளாக்குகிறது; காங்கிரஸ் குற்றச்சாட்டு!
பாஜக ஆட்சியில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.18.42 உயர்த்தி ரூ.8 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
புதுடெல்லி,
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து இன்று அறிவிப்பு வெளியிட்டது.
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது என்று மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புகளை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ''மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது" என்று குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உடனடியாக பதிலளித்தார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
3/3
Dear FM,
Nation doesn't need jugglery of figures to dupe the people,
Nation doesn't need "Jumlas",
Nation needs roll back of Excise on #Petrol & @Diesel to May 2014 levels of ₹9.48/Litre on Petrol & ₹3.56/Litre on Diesel.
Stop deceiving,
Show the courage to give relief. https://t.co/GELhyUWFAC
"பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரியை மே 2014ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்.
மே 2014 இல், டீசல் மீதான கலால் வரி = லிட்டருக்கு ரூ.3.56, பெட்ரோல் மீதான கலால் வரி = ஒரு லிட்டருக்கு ரூ.9.48. அதே வேளையில், இன்று மே 21, 2022 அன்று, பெட்ரோல் மீதான கலால் வரி = ஒரு லிட்டருக்கு ரூ. 27.90.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.18.42 உயர்த்தி, இப்போது லிட்டருக்கு ரூ. 8 குறைக்கப்பட்டுள்ளது. மக்களை முட்டாளாக்காதீர்கள்."
இவ்வாறு தெரிவித்தார்.