ஸ்கூட்டர்-கார் மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பரிதாப சாவு


ஸ்கூட்டர்-கார் மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பரிதாப சாவு
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுள்ளியா அருகே ஸ்கூட்டர்-கார் மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

மங்களூரு;

ஸ்கூட்டர்-கார் மோதல்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா எலிமலே அருகே பஜிநடுக்கா பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் நிஷாந்த். மகள் மோக்‌ஷா. இந்த நிலையில் நேற்று முன்தினம் நிஷாந்த் மற்றும் அவரது தங்கை மோக்‌ஷா ஆகிய 2 பேரும் எலிமலே பகுதியில் இருந்து ஜபாலே பகுதிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை நிஷாந்த் ஓட்டினார்.

அப்போது அவர்கள் சுப்பிரமணியா-ஜலசூர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த காரும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும், தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

அண்ணன்-தங்கை சாவு

இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சுள்ளியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நிஷாந்த் உயிரிழந்தார். மோக்‌ஷாவுக்கு சுள்ளியா ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோக்‌ஷாவும் உயிரிழந்தாள்.இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.


Next Story