ஆந்திராவில் சென்னை ரெயிலில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்


ஆந்திராவில் சென்னை ரெயிலில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்
x

வங்காளதேச நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம், கொல்கத்தாவில் உருக்கி கட்டிகளாக மாற்றப்பட்டது தெரியவந்தது.

விசாகப்பட்டினம்,

விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்துக்கு தங்கம் கடத்திவரப்படுவதாக வருவாய் நுண்ணறிவு இயக்கக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு அதிகாரிகள் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹவுரா-சென்னை மெயில் ரெயிலில் கொல்கத்தாவில் இருந்து வந்த ஒரு பயணியின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர் பைக்குள் 8 தங்கக்கட்டிகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 7.396 கிலோ எடையுள்ள அந்த தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.4.21 கோடி ஆகும்.

வங்காளதேச நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம், கொல்கத்தாவில் உருக்கி கட்டிகளாக மாற்றப்பட்டது தெரியவந்தது. அதை சென்னை ரெயிலில் கடத்தி வந்தவருடன், ரெயில் நிலையத்துக்கு அவரை சந்திக்க வந்த நபரும் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story