சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் தான் போட்டி; சித்தராமையா பேட்டி


சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் தான் போட்டி; சித்தராமையா பேட்டி
x

சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சித்தராமையா ெதரிவித்துள்ளார்.

ஹாசன்:

சித்தராமையாவுக்கு வரவேற்பு

முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று ஹாசனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடுவுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. சித்தராமையாவை காண அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதையடுத்து அரக்கல்கோடு அருகே ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட கனகதாச பவன், சங்கொள்ளி ராயண்ணா பவனை திறந்து வைத்தார்.

ஒரு தொகுதியில் தான்...

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என்று யதீந்திரா சித்தாமையா கூறியது பற்றி நிருபர்கள் சித்தராமையாவிடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், அது யதீந்திராவின் கருத்து. எனது கருத்து அல்ல. என் மீது உள்ள அன்பினால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், என்னை பலி ஆடு ஆக்குவதாக குமாரசாமி கூறி உள்ளார். குமாரசாமி எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை. என்னை யாரும் பலி ஆடு ஆக்க முடியாது. மக்கள் தான் ெவற்றி, தோல்வியை தீர்மானிப்பார்கள். எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.


Next Story