பெங்களூருவில் ரவுடியின் கூட்டாளிக்கு துப்பாக்கி விற்க முயன்ற வாலிபர் கைது


பெங்களூருவில்  ரவுடியின் கூட்டாளிக்கு துப்பாக்கி விற்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:21+05:30)

பெங்களூருவில் ரவுடியின் கூட்டாளிக்கு துப்பாக்கி விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீசார் சாம்புரா ரெயில்வே கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் ஓட்டம் பிடித்தார். இதனால் சுதாரித்து கொண்ட போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர் கையில் வைத்திருந்த பையை வாங்கி பார்த்த போது பைக்குள் 3 துப்பாக்கிகள், 9 தோட்டாக்கள் இருந்தது.

இதுகுறித்து அந்த வாலிபரிடம் விசாரித்த போது அவர் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பிரபுல் ஞானேஸ்வர் கவாண்டே (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் பெங்களூருவை சேர்ந்த ரவுடியின் கூட்டாளி ஒருவரிடம் விற்பனை செய்ய நாக்பூரில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்களை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபுலை கைது செய்த போலீசார் 3 துப்பாக்கிகள், 9 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். கைதான பிரபுல் மீது டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story