சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில்  அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். தேர்வர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு விடைத்தாள்களை திருத்தி கொடுத்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கில் அதிகளவில் பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக கடந்த மாதம் (ஆகஸ்டு) அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தற்போது விசாரணையை தொடங்கி உள்ளது.


Next Story