சிக்கமகளூருவில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உள்பட 2 பேர் சாவு


சிக்கமகளூருவில்  மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உள்பட 2 பேர் இறந்தனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா காரேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மனு (வயது 34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மனு அப்பகுதியில் மின்சாரத்துறையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கனமழை காரணமாக காரேஹள்ளி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. இதனால் அதனை மனு சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அதேப்போல தரிகெரே தாலுகா எரதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் (40). விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள தென்னை மரத்தில் இரும்பு ஏணி மூலம் ஏறி தேங்காய் பறிக்க சென்றார். அப்போது அருகில் சென்ற மின்வயர் ஏணியின் மீது உரசியதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட விஸ்வநாத், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் குறித்து அஜ்ஜாம்புரா, லிங்கதஹள்ளி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story