சிக்கமகளூருவில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் பறிமுதல்
சிக்கமகளூருவில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சிக்கமகளூரு-
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சிக்கமகளூரு ராம்புரா சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.1¾ லட்சம் ரொக்கம் இருந்தது. இதுகுறித்து காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தொழில் சம்பந்தமாக பணம் கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து ரூ.1¾ லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்து விட்டு ரொக்க பணத்தை வாங்கிவிட்டு செல்லும் படி பறக்கும் படையினர் கூறினர். இதுகுறித்து சிக்கமகளூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.