தார்வாரில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


தார்வாரில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தார்வாரில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

உப்பள்ளி-

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 10-ந் தேதி நடந்தது. இன்று(சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதுபோல் தார்வார் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தார்வார் டவுனில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் குருதத்த ஹெக்டே, போலீசாருடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்து பார்வையிட்டார்.

அப்போது அவர் வாக்கு எந்திரங்கள் அடங்கிய இடத்திற்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தார்வார் மாவட்டத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தார்வார் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. அவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(இன்று) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். வாக்கு எண்ணும் பணிக்காக 375 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story