கோகர்ணாவில் அரபிக்கடலில் மூழ்கி வாலிபர் பலி


கோகர்ணாவில் அரபிக்கடலில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 1 Nov 2022 12:30 AM IST (Updated: 1 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோகர்ணாவில் அரபிக்கடலில் மூழ்கி பீகாரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.

கார்வார்;


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குமார் அபிஷேக்(வயது 28). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணாவுக்கு சுற்றுலா வந்தார். அவர் தனது 3 நண்பர்களுடன் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

இந்த நிலையில் குமார் அபிஷேக், தனது நண்பர்களுடன் சேர்ந்து கரியப்பக்கட்டே அருகே உள்ள வெள்ளி கடற்கரையில் குளிப்பதற்காக சென்றார். அவர்கள் 4 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கிய குமார், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதைபார்த்த கடலோர மீட்பு படையினர் விரைந்து சென்று குமாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கோகர்ணா போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story