இந்தியாவில் இன்று ஒரேநாளில் 16,299 பேருக்கு கொரோனா பாதிப்பு


இந்தியாவில் இன்று ஒரேநாளில் 16,299 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2022 4:36 AM GMT (Updated: 2022-08-11T11:27:21+05:30)

இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில நாட்களாக உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு நேற்று சற்று குறைந்தது. இந்தநிலையில் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், இது 16 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 16,047 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 16,299 ஆக அதிகரித்துள்ளது.ஒரே நாளில் 19,431 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,35,55,041 ஆனது.நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,28,261 லிருந்து 1,25,076 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக பதிவானது. இந்தநிலையில், இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 879 பேர் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,07,29,46,593 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 25,75,389 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.


Next Story