இந்தியாவில் மளமளவென குறையும் தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 1,957 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று இந்த எண்ணிக்கை ஆயிரத்து 957 ஆக குறைந்தது.இதுவரை மொத்தம் 4 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரத்து 394 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 654 பேர் மீண்டனர். இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 198 பேர் குணமடைந்துள்ளனர்.நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 28,079 லிருந்து 27,374 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,822 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story