கர்நாடகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம்
கர்நாடகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரமன்குப்தா
* நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த அப்துல்லா சலீம், பெங்களூரு நகர சிறப்பு கமிஷனராக (போக்குவரத்து) நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
* குற்ற விசாரணை பிரிவு கூடுதல் டி.ஜி.பி. உமேஷ்குமார், நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பணி செய்த தேவஜோதி ராய், மனித உரிமைகள் ஐ.ஜி.யாக இனி பணி செய்வார்.
* பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக பணியாற்றி வந்த ரமன் குப்தா, பெங்களூரு உளவுத்துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* பெங்களூருவில் இணை கமிஷனராக (போக்குவரத்து) பணியாற்றிய ரவிகாந்தே கவுடா, சி.ஐ.டி. ஐ.ஜி.யாக இனி பணியை தொடருவார்.
* உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி. லோகேஷ் குமார், பல்லாரி மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சந்திரகுப்தா- ரவி டி.சன்னன்னவர்
* மைசூரு நகர கமிஷனராக பணி செய்து வந்த சந்திரகுப்தா, மேற்கு மண்டல டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
* பெங்களூருவில் குற்றம்-1 பிரிவில் துணை போலீஸ் கமிஷனராக பணி செய்த சரணப்பா, மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* சி.ஐ.டி.யில் போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்த அனுசேத், இணை கமிஷனராக (போக்குவரத்து) பணியாற்றுவார். இந்த பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டது.
* குற்ற விசாரணை பிரிவு 3-ல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ரவி டி.சன்னன்னவர், கர்நாடக மாநில மின்னணு வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக இனி பணி செய்வார்.
* குற்ற விசாரணை பிரிவு 2-ல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ரமேஷ், மைசூரு நகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.