மங்களூருவில்வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி
மங்களூருவில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி மோசடி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு-
மங்களூருவில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.1½ லட்சம் மோசடி
தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் அருகே உள்ள சோமேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் லீனா லோபோ. இவர் அதேப்பகுதியை சேர்ந்த நாகேந்திர கணபதியிடம் தனக்கு தெரிந்த நபர்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் உனது நண்பர்கள் யாருக்காவது வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால் என்னிடம் தெரிவிக்கவும் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து நாகேந்திர கணபதி அவரது நண்பர்கள் அவிஷ் டிசோசா மற்றும் ஜாய்சன் லூயிஸ் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து லீனோ லோபா வேளிநாட்டில் வேலை வாங்க முண்பணம் செலுத்த வேண்டும் என அவர்களிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய நாகேந்திர கணபதி, அவிஷ் டிசோசா மற்றும் ஜாய்சன் லூயிஸ் ஆகியோர் ரூ.1½ லட்சம் வரை பல்வேறு தவணைகளாக லீனோ லோபா வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளனர். ஆனால் லீனோ லோபா கூறியபடி அவர்களுக்கு நீண்ட நாட்களாக வேலை வாய்ப்பு குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
வழக்குப்பதிவு
இதனால் தாங்கள் ஏமாற்றம் அடைந்த அவர்கள் 3 பேரும் உல்லால் போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் லீனா லோபோ, இதேப்போல் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஜித்தேஷ் கிளிஷன் டிசோசா, ரிக்சன் சான்டானிஸ், உள்பட பலரிடம் ரூ.1½ லட்சம் வரை வாங்கி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உல்லால் போலீசார் லீனா லோபோ மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.