நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில்  பா.ஜனதா வெற்றி பெறும்  முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேச்சு
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றிபெறும் என்று பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி சி.டி.ரவி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்பு பேசினார்.

சிக்கமகளூரு-

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றிபெறும் என்று பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி சி.டி.ரவி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்பு பேசினார்.

சி.டி.ரவி தோல்வி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இந்தநிலையில் சிக்கமகளூரு சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி சி.டி.ரவி, காங்கிரஸ் வேட்பாளர் தம்மய்யாவிடம் தோல்வி அடைந்தார்.

இவர் சி.டி.ரவியின் ஆதரவாளர் ஆவார். தேர்தலில் தோல்வி அடைந்த சி.டி.ரவி அதில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்தநிலையில் சிக்கமகளூரு பா.ஜனதா அலுவலகத்தில் சி.டி.ரவி தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் நடந்தது.

அவதூறாக பேசியதாக...

கூட்டத்தில் சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜனதா தோற்றதற்கான காரணம் என்ன என்று சி.டி.ரவி தொண்டர்களிடம் கேட்டார். இதற்கு, காங்கிரஸ் கட்சி அலையால் சிக்கமகளூரு தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஒரு சமூகத்தை சி.டி. ரவி அவதூறாக பேசியதாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சியினர் பரப்பி மக்களை நம்ப வைத்து உள்ளனர்.

இதனால் பா.ஜனதா மீது மக்கள் வெறுப்படைந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்று பா.ஜனதா நிர்வாகிகள் கூறினர். தொண்டர்களும் அதையே வழிமொழிந்தனர்.

பாடுபட வேண்டும்

பின்னர் பேசிய சி.டி.ரவி சட்டசபை தேர்தல் தோல்வியை பற்றி கவலை படாமல் கட்சியை பலப்படுத்து பணியை மேற்கொள்ள வேண்டும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற பா.ஜனதா கட்சி தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என சி.டி.ரவி கூறினார்.


Next Story