'3வது முறை நான் பிரதமராக வரும்போது... இது என் உத்தரவாதம்' - பிரதமர் மோடி அதிரடி பேச்சு
டெல்லியில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் பிரஹதி மைதான் பகுதியில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாரத மண்டபத்தை பார்த்த பின் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைவார்கள். இன்று கால்கில் வெற்றி தினமான வரலாற்று நாள். நாட்டின் எதிரிகள் நமது வீரமிக்க மகன்கள், மகள்களால் தோற்கடிக்கப்பட்டனர். கார்கில் போர்ல் தங்கள் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் டெல்லியில் விரைவில் கட்டப்படும்.
சிறந்த வேலைகள் குறித்து விமர்சிப்பதையும், நிறுத்துவதையும் சிலர் நோக்கமாக கொண்டுள்ளனர். 'கடமை பாதை' அமைக்கப்படும்போது முக்கிய செய்தி என செய்தித்தாள்களின் முதல்பக்கத்தில் பல கருத்துக்கள் இருந்தன.
இந்த விவகாரம் கோர்ட்டுகளிலும் எழுப்பப்பட்டது. ஆனால், கடமை பாதை அமைக்கப்பட்ட பின் அதே மக்கள் இது நல்லது என கூறினர். பாரத் மண்டபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் இங்கு வந்து கருத்தரங்கில் விரிவுரை வழங்க வருவும் வாய்ப்பு உள்ளது. 3வது முறை நான் பிரதமராக வரும்போது உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் இந்தியா இருக்கும். இது மோடியின் உத்தரவாதம்' என்றார்.