மைசூருவில் மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதல்; வாலிபர் சாவு
மைசூருவில் மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதலில் வாலிபர் இறந்தார்.
மைசூரு-
மைசூரு மாவட்டம் விஜயநகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நாகராஜ் மைசூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் அவர் வீட்டில் இருந்து மைசூருவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் விஜயநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாகராஜ் படுகாயம் அடைந்தார். ஸ்கூட்டரில் வந்த நபரும் காயம் அடைந்தார். அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வி.வி.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.