சொத்து தகராறில் கத்தியால் குத்தி விவசாயி கொலை
ஹரிஹராவில் சொத்து தகராறில் விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாவணகெரே-
ஹரிஹராவில் சொத்து தகராறில் விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறு
தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகாவை சேர்ந்தவர் குண்டப்பா. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி லட்சும்மா. இவரது மகன் குமார் (வயது 37). 2-வது மனைவி ரத்னாம்மா. இவரது மகன் ராஜூ(வயது 33). இருவரும் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குண்டப்பாவிற்கு அதிகளவு சொத்துகள் இருப்பதாக தெரிகிறது. இந்த சொத்துகளை இன்னும் பிரிக்கவில்லை.
இந்நிலையில் சொத்துகளை பங்கிடுவது தொடர்பாக குமார், ராஜூவிற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அடிக்கடி 2 பேரும் மோதி கொண்டனர். நேற்று முன்தினம் குமார் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ராஜூ தனது நண்பர் மாருதியுடன் வந்து, குமாரை வழிமறித்து தாக்கினார்.
கத்தியால் குத்தி கொலை
இதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு ஹரிஹராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிைலயில் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்ற ராஜூ மற்றும் மாருதி, கத்தியால் குமாரை குத்தினர். இதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து ஹரிஹரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜூ, மாருதி ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.