ராமநகரில் திடீர் நிலநடுக்கம்
ராமநகரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் படார்ஹள்ளி, திம்மசந்திரா, பெஜ்ஜரஹலிகட்டே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 3 இடங்களில் பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த பகுதியினர் கூறினர்.
இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கர்நாடகத்தில் தட்சிண கன்னடா, குடகு போன்ற மாவட்டங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது ராமநகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story