உப்பள்ளியில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது


உப்பள்ளியில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2022 12:30 AM IST (Updated: 21 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உப்பள்ளி;


தார்வாா் மாவட்டம் உப்பள்ளி கோகுல் ரோடு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 பேரை அழைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த காஜா ஷாப் (வயது 40) மற்றும் ஜபீர்ஹமத் (35) என்பது தெரியவந்தது. இவர்கள் உப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இரவு நேரத்தில் புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள து விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவா்கள் கொடுத்த தகவலின் பேரில் 4 இருசக்கர வாகனங்களையும், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story