உப்பள்ளியில் திருமண மண்டபத்தில் ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு
உப்பள்ளியில் திருமண மண்டபத்தில் ரூ.2 லட்சம் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த வித்யாநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் திருமணம் ஒன்று நடந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக உத்தர கன்னடா மாவட்டம் ராமதுர்காவில் இருந்து விஸ்வநாத் பட்டீல் என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது இவரது குடும்பத்தினர் ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நகைகளை கைப்பையிலேயே வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, எதிர்பாராவிதமாக தங்க நகை வைத்திருந்த பையை கீழே வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இதை நோட்டமிட்ட மர்ம நபர் யாரோ அந்த நகைகளை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஸ்வநாத், இது குறித்து வித்யாநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.