சிவமொக்காவில் ரூ.6¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
சிவமொக்கா மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ரூ.6¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிவமொக்கா-
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் மதுபானக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டம் முழுவதும் போலீசாரும், கலால் துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக யாரேனும் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்கிறார்களா? என்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக பதுக்கி விற்கப்பட்ட 448 மதுப்பாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்களையும், 360 பீர் பாட்டில்களையும் போலீசாரும், கலால் துறையினரும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் 181 பேர் மீது போலீசாரும், கலால் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.