சிவமொக்காவில் தேர்தல் பணிக்கு மதுபோதையில் வந்த ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


சிவமொக்காவில்  தேர்தல் பணிக்கு மதுபோதையில் வந்த ஊழியர்கள் 2 பேர் பணியிடை  நீக்கம்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் தேர்தல் பணிக்கு மதுபோதையில் வந்த ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவமொக்கா-

கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்்கை வருகிற 13-ந் தேதி நடக்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவமொக்கா டவுனில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட், உள்ளிட்ட தளவாட பொருட்கள் அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதேப்போல் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேற்று முன்தினம் அந்ததந்த வாக்குசாவடிகளுக்கு சென்றனர். அப்போது தேர்தல் ஊழியர்கள் மது அருந்தி விட்டு 2 ஊழியர்கள் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தேர்தல் அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர்கள் 2 பேரும் மது அருந்தியது மருத்துவ சோதனையில் உறுதியானது.

விசாரணையில் அவர்கள் சொரப் தாலுக்கா ஹூரளி அரசு பள்ளி ஆசிரியர் மாதேஷ் மற்றும் பத்ராவதி தாலுகா பி.ஆர்.பி. தோட்டத்துறை அலுவலக உதவியாளர் பி.ரமேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டார்.

மேலும் அவர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story