ஸ்ரீரங்கப்பட்டணாவில் தமிழக நாடோடி பெண் படுகொலை


ஸ்ரீரங்கப்பட்டணாவில்  தமிழக நாடோடி பெண் படுகொலை
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கப்பட்டணா அருகே தமிழக நாடோடி பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மண்டியா-

ஸ்ரீரங்கப்பட்டணா அருகே தமிழக நாடோடி பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படுகொலை

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கஞ்சம் கிராமத்தில் தமிழகத்தை சேர்ந்த நாடோடி சமுதாயத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் குழுவாக வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்குள்ள நிமிஷாம்பா கோவில் அருகே காவிரி ஆற்றில் பக்தர்கள் வீசி எறியும் நாணயங்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் கங்கா (வயது 38) என்ற பெண்.

இவர் நேற்று முன்தினம் இரவு கஞ்சம் கிராமத்தில் மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தலைநசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்மநபர்கள் தலையில் கல்லைப்பேட்டு கொலை செய்தது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கப்பட்டணா நியாமதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலையான கங்காவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்திற்காக கொலை நடந்தது?, கங்காவை கொலை செய்ததது யார்? என்பது தெரியவில்லை.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story