சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மேலிடம் ஒப்புதலுடன் சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுவேன்-விஜயேந்திரா பேட்டி
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மேலிடம் ஒப்புதலுடன் சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுவேன் என்று விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா: மாநில பா.ஜனதா துணைத்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நிருபர்கள் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து விஜயேந்திரா கூறியதாவது:-
வரும் சட்டசபை தேர்தலில் சிகாரிப்புரா தொகுதியில் நான் போட்டியிடும் முடிவை கட்சி மேலிடம் உரிய நேரத்தில் அறிவிக்கும். எனது தந்தை எடியூரப்பா அறிவித்தபடி கட்சி மேலிட ஒப்புதலுடன் சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுவேன். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்யப்படும். இந்த முறை தேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story