சந்தன மரங்களை கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை


சந்தன மரங்களை கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சந்தன மரங்களை கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா முகுகவுடா பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த மரங்களை கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர்கள் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். இதையடுத்து சந்தன மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா பில்லஹள்ளி பகுதிைய சேர்ந்த முகமது ரிஸ்வான் (வயது 25), பர்கத் அலி (54) மற்றும் தாவணகெரே மாவட்டம் சன்னகரி தாலுகா ஒன்னேபாகி பகுதியை சேர்ந்த முகமது ஆஸம் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படு்த்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி மானு, சந்தனமரங்களை வெட்டி கடத்திய 3 பேர் மீதும் குற்றம் நிரூபணமானதால் அவர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டணையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து அவர்கள் 3 பேரும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story