வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை


வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை
x

வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிவமொக்கா;

வாலிபரை கொல்ல முயற்சி

சிவமொக்கா டவுன் துங்காநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோபால விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்டு சந்தோஷ் (வயது 32). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி அந்தப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அங்குள்ள பூங்கா அருகே சென்றபோது, அங்கு வந்த 3 பேர் அவரை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரிச்சர்டு சந்தோசை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து துங்காநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தலா 3 ஆண்டுகள் சிறை

மேலும் ரிச்சர்டு சந்தோசை கொலை செய்ய முயன்றதாக சிவெமாக்கா டவுனை சேர்ந்த கிரண் (வயது 23), தீக்‌ஷித் (21), நிதின் (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story