இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா
x

நேற்று மட்டும் 4,63,338 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,38,636 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,037- ஆக உள்ளதுகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,84,646- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,953 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் நேற்று மட்டும் 4,63,338 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது


Related Tags :
Next Story