கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா - 2 பேர் உயிரிழப்பு
தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவின் மாறுதலான ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Related Tags :
Next Story