பெங்களூரு வடக்கு பகுதிகளில் 2 நாட்கள் மது விற்க தடை
பெங்களூரு வடக்கு பகுதிகளில் 2 நாட்கள் மது விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு வடக்கு மண்டல பகுதிகளில் உள்ள ஜே.சி.நகர், ஹெப்பால், ஆர்.டி.நகர் ஆகிய 3 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 5-ந் தேதி தசரா விழாவையொட்டி பல்லக்கு ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
இதையடுத்து, ஜே.சி.நகர், ஹெப்பால், ஆர்..டி.நகர் ஆகிய 3 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் வருகிற 5-ந் தேதி காலையில் இருந்து 6-ந் தேதி மதியம் 12 மணிவரை மதுக்கடைகள் திறக்கவும், மதுபானங்கள் விற்பனை செய்யவும் தடை விதித்து போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
Related Tags :
Next Story