திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது


திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது
x

திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே மாதநாயக்கனஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மணிகண்டா, சையத், முகமது அலி, சபியுல்லா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் 4 பேரும், பெங்களூரு புறநகர் பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதிகளில் இரும்பு கம்பிகள், பலகைகள், இரும்பு தகடுகளை திருடி விற்று வந்ததுதெரிந்தது. இவ்வாறு திருடும் பொருட்களை விற்று கிடைக்கும் பணத்தை 4 பேரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



Next Story