திருட்டு வழக்குகளில் நேபாளத்தை சேர்ந்த 3 பேர் கைது
திருட்டு வழக்குகளில் நேபாளத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு பாகலகுண்டே போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த நேபாளத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் தினேஷ், கணேஷ், சுரேந்திரா தாபா என்று தெரிந்தது.
இவர்கள் 3 பேரும் பாகலகுண்டே, அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 3 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைதான 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில் 3 வீடுகளில் திருடிய 381 கிராம் தங்க நகைகள், 770 கிராம் வெள்ளி பொருட்கள், பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். கைதான 3 பேர்மீதும் பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story