மண்டியா மைசுகர் சர்க்கரை ஆலையில் இன்று 2-வது பாய்லர் திறப்பு; மந்திரி கோபாலய்யா தகவல்


மண்டியா மைசுகர் சர்க்கரை ஆலையில் இன்று 2-வது பாய்லர் திறப்பு; மந்திரி கோபாலய்யா தகவல்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா மைசுகர் சர்க்கரை ஆலையில் இன்று(திங்கட்கிழமை) 2-வது பாய்லர் திறக்கப்படுகிறது என்று மந்திரி கோபாலய்யா தெரிவித்துள்ளார்.

மண்டியா;

2-வது பாய்லர் திறப்பு

மண்டியாவில் உள்ள மைசுகர் சர்க்கரை ஆலையை மீண்டும் முழுமையாக திறப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் மந்திரி கோபாலய்யா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மந்திரி கோபாலய்யா கூறியதாவது:- மைசுகர் சர்க்கரை ஆலைப்பணிகள் குறித்து முழுவதுமாக ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலையின் முதல் பாய்லர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) 2-வது பாய்லர் திறந்து வைக்கப்படுகிறது. மைசுகர் சர்க்கரை ஆலைகளுக்கு செல்லும் கரும்புகள் வேறு ஆலைகளுக்கு பயன்படுத்தகூடாது என்று மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு முறைப்படி ஊதியங்கள் சென்றடையவேண்டும். கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட சில நாட்களிலேயே ஊதியம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.

முதல்-மந்திரி திறப்பு

அப்போது தான் விவசாயிகள் மத்தியில் மைசுகர் சர்க்கரை ஆலை மீது மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். தற்போது சர்க்கரை ஆலைகள் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதை காக்கும் வகையில் சரியானப்படி கரும்புகள் சர்க்கரை ஆலைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது.

வருகிற 30-ந் தேதிக்குள் அனைத்துக் கட்ட பணிகளையும் முடிக்கும்படி ஊழியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். ஏனென்றால் அன்றைய தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சர்க்கரை ஆலையை முழுமையாக திறந்து அனைத்து பணிகளை தொடங்கி வைக்கிறார். மைசுகர் சர்க்கரை ஆலை திறம்பட செயல்பட மாவட்ட அதிகாரிகள் எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story