மருத்துவ மாணவர் உள்பட 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை
மருத்துவ மாணவர் உள்பட 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர் விஷ்ணு. இவர், அனீஷ், யுவராஜ் ஆகிய 3 பேருடன் சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி காரில் சிவமொக்கா மாவட்டம் ஆகும்பே மலைப்பாதை வழியாக கஞ்சா கடத்தியுள்ளனர். இதையடுத்து சோதனைச்சாவடியில் நடந்த சோதனையின்போது 3 பேரும் தீர்த்தஹள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை தீர்த்தஹள்ளி கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் கஞ்சா கடத்திய மருத்துவ மாணவர் விஷ்ணு உள்பட 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் உத்தரவிட்டார்.