கர்நாடகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வைஉடனே வாபஸ் பெற வேண்டும்


கர்நாடகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வைஉடனே வாபஸ் பெற வேண்டும்
x
தினத்தந்தி 28 Feb 2023 10:45 AM IST (Updated: 28 Feb 2023 10:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் 2 மடங்கு அதிகரித்து உள்ளதை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு-

உதவிகளை செய்யவில்லை

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராயைா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா நாட்டுக்கு சேவையாற்றுவதை விட்டுவிட்டு பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகிறார்கள். நமது மாநிலத்தில் இருந்து அதிகளவில் வரி வருவாயை மத்திய அரசு பெற்றது. ஆனால் இங்கு வெள்ளம், கொரோனா போன்ற நெருக்கடிகள் வந்தபோது, தேவையான உதவிகளை செய்யவில்லை. வளர்ச்சி பணிகளுக்கு கர்நாடகத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை.

மோடி கர்நாடகத்திற்கு வரும்போது எல்லாம் கர்நாடகத்திற்கு மத்திய அரசால் ஏற்படும் அநீதி குறித்து நான் கேள்வி எழுப்புகிறேன். நடப்பு ஆண்டில் மத்திய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம் ரூ.4¾ லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஆனால் கர்நாடகத்திற்கு மத்திய அரசு வெறும் ரூ.37 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இது அநீதி இல்லையா?.

பொய்யான தகவல்

பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கன்னட சங்க விழாவில் கலந்து கொண்டு, ரெயில்வே, நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டணி அரசு வழங்கிய நிதியை விட நாங்கள் அதிகமாக வழங்கியுள்ளோம் என்று மோடி கூறியுள்ளார். இது முற்றிலும் பொய்யான தகவல். மோடி எல்லா இடங்களிலும் கூறுவது போல் கர்நாடக விஷயத்தில் பொய் பேசியுள்ளார். கர்நாடகத்தில் அறிவாளிகள் அதிகமாக உள்ளனர். அவர்கள் ஆவணங்கள் அடிப்படையில் பேசுகிறார்கள். இதை மோடி மறந்துவிட்டார். கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கர்நாடகத்தில் 2 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கப்பட்டது.

2 மடங்கு அதிகரிப்பு

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பா.ஜனதா அரசு 1,479 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மோடி பதில் அளிப்பது இல்லை. கர்நாடகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.



Next Story