மணிப்பூர் மக்களுக்கு அன்பையும், அமைதியையும் இந்தியா கூட்டணி கொண்டு வரும் - ராகுல் காந்தி
மணிப்பூர் மக்களுக்கு அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களை அழைத்துக்கொள்ளுங்கள் மோடி அவர்களே.. நாங்கள் 'இந்தியா' மணிப்பூரில் அமைதி திரும்ப நாங்கள் உதவுவோம். ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் உதவுவோம். மக்களுக்கு அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம்.மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணத்தை மீண்டும் உருவாக்குவோம்.என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story