இந்தியா ஒரு போருக்கு தயாராகி வருகிறது; காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
மத்திய புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை பாஜக அரசு அச்சுறுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
மும்பை,
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக அரசுக்கு எளியோர் மீது அக்கறை இல்லை, பணக்காரர்களை பற்றியே கவலை கொள்கிறது எங்களது நோக்கம் விலைவாசியை குறைப்பதுதான். சமையல் எரிவாயு விலையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏற்றிவிட்டு ரூ.200 குறைத்து நாடகம் ஆடுகிறார்கள். மத்திய புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது. ஊழலை ஒழிப்பதை பற்றி பேசும் பாஜகதான் மிகப்பெரிய ஊழலை செய்து வருகிறது. பயப்பட மாட்டோம், ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்து போராடுவோம்" என்றார்.
Related Tags :
Next Story