உலகில் அதிக டிஜிட்டல் பணபரிமாற்றம் நடைபெறும் நாடு இந்தியா - மத்திய மந்திரி கிஷண்ரெட்டி


உலகில் அதிக டிஜிட்டல் பணபரிமாற்றம் நடைபெறும் நாடு இந்தியா - மத்திய மந்திரி கிஷண்ரெட்டி
x

கல்வியறிவு குறைவாக இருக்கும் இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம் சாத்தியமா? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

பெங்களூரு,

பெங்களூருவில் நடைபெற்ற 'சங்கல்ப் சித்தி' நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித்துறை மந்திரி கிஷண்ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:-

கல்வியறிவு குறைவாக இருக்கும் இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம் சாத்தியமா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் இன்று உலகிலேயே அதிக டிஜிட்டல் பணபரிமாற்றம் நடைபெறும் நாடாக இந்தியா மாறியுள்ளது. நாட்டில் ரெயில், சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட வசதிகள் அனைத்து இடங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சி அமைவதற்கு முன்பு நாட்டில் 64 விமான நிலையங்கள் இருந்தன. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் புதிதாக 54 விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 118 விமான நிலையங்கள் இருக்கின்றன. வரும் நாட்களில் மேலும் 100 விமான நிலையங்கள் மற்றும் 100 சிறிய விமான தளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் இன்று அமைதி நிலவுகிறது. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது மட்டுமே அரசின் கடமை. தொழில் செய்வது அரசின் பணி அல்ல. இதை தொழில்துறை ஏற்று கொண்டுள்ளது.

இவ்வாறு கிஷண்ரெட்டி பேசினார்.


Next Story