இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட 44 சதவிகிதம் அதிகரிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட 44 சதவிகிதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 April 2023 10:24 AM IST (Updated: 26 April 2023 10:24 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. நாட்டில் அதிகரித்து வரும் தொற்று பாதிப்பு பாதிப்பால் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 தினங்களாக மள மளவென சரிந்தது.

ஆனால், இன்று மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. கொரோனா பாதிப்பு நேற்றை விட 44 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் மேலும் 9,629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,967- ஆக உள்ளது.


Next Story