இந்தியாவில் தொடர்ந்து சரியும் கொரோனா பாதிப்பு: புதிதாக 124 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 202 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 174 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று புதிதாக 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில், 314 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 995 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று அதில் 192 குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 3 ஆயிரத்து 001 பேர் சிகிச்சையில் இருந்தனர்.
தொற்றுக்கு நேற்று முன்தினம் 2 பேர் பலியானார்கள். இன்றும் பலி எண்ணிக்கை 2 ஆக இருந்தது. அதில், கேரளாவில், விடுபட்ட இரண்டு மரணமும் அடங்கும். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 884 ஆக அதிகரித்தது.