ஒரே நாளில் 3,824 பேருக்கு கொரோனா: அதிரடியாக தொற்று பாதிப்பு அதிகரிப்பு


ஒரே நாளில் 3,824 பேருக்கு கொரோனா: அதிரடியாக தொற்று பாதிப்பு அதிகரிப்பு
x

கோப்புப்படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கு கீழே (2,994) பதிவானது. ஆனால் நேற்று தொற்று பாதிப்பு அதிரடியாக அதிகரித்தது. நேற்று ஒரு நாளில் மட்டுமே 3,824 பேருக்கு தொற்று உறுதியானது. இது 184 நாட்களில் அதிகபட்ச எண்ணிக்கை என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கது.

கேரளா, மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு, உ.பி., டெல்லி, குஜராத், அரியானா, இமாசலபிரதேசம், கோவா என 10 மாநிலங்களில் தொற்று பாதிப்பு 3 இலக்கங்களில் பதிவாகி இருக்கிறது.

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 22 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

நேற்று தொற்றில் இருந்து 1,784 பேர் குணம் அடைந்தனர். இதுவரை தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 73 ஆயிரத்து 335 ஆக அதிகரித்திருக்கிறது.

தொற்றினால் நேற்று முன்தினம் 9 பேர் இறந்ததாக பதிவானது. நேற்று 5 பேர் பலியாகினர். டெல்லி, அரியானா, கேரளா, ராஜஸ்தானில் தலா ஒருவர் பலியாகினர். கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் ஒன்றையும் கணக்கில் சேர்த்தனர்.

இதனால் தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 881 ஆக அதிகரித்தது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 2,035 அதிகரித்தது.

இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 389 ஆக இருந்தது.


Related Tags :
Next Story