மருத்துவ சிகிச்சை பெற இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச குடும்பம்: மனிதாபிமான அடிப்படையில் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!


மருத்துவ சிகிச்சை பெற இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச குடும்பம்: மனிதாபிமான அடிப்படையில் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
x
தினத்தந்தி 25 Oct 2022 6:04 PM IST (Updated: 25 Oct 2022 6:07 PM IST)
t-max-icont-min-icon

தீவிர விசாரணைக்கு பின், அவர்கள் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் வங்கதேச எல்லை காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கொல்கத்தா,

வங்கதேசத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்( 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 5 பேர்), இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது எல்லை பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், "தன்னுடைய அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக, இந்தியாவில் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும் என்பதால் இங்கு வந்தோம்" என்றார்.

அதன்பின்னர் தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பின், அவர்கள் அனைவரும் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் வங்கதேச எல்லை காவல்படையினரிடம் நேற்று காலை 8.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டனர் என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

4096 கி.மீ தூரம் விரிந்துள்ள இந்தியா - வங்கதேச எல்லையை கண்காணிக்கும் பாதுகாப்பு பணியில், எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதும், அத்துமீறி நுழையும் வங்கதேசத்தினரை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி வருவதும் நடைபெறுகிறது.


Next Story