இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!


இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!
x

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் வெளியான சுகாதாரத்துறை அறிக்கையின் படி, 2,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நேற்று வெளியான அறிக்கையின் படி, 2,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில், இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,46,06,460 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் தற்போது 30,362 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,754 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,47,344 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும் 3,97,407 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Next Story