இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பால் மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் புதிதாக 2,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் நேற்று 2,710 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில், 2,685 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்து 215 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பால் மேலும் 33 பேர் இறந்துள்ளனர். நேற்றைய அறிவிப்பின்படி, ஒரே நாளில் 14 பேர் பலியாகிய நிலையில், இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 572 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில், தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,158 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 16,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று 14,39,466 டோஸ்களும், இது வரை 193 கோடியே 13 லட்சம் 41 ஆயிரத்து 918 தடுப்பூசி டோஸ்களும் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.