பூடான் எல்லையில் சீனா புதிய கிராமங்களை அமைத்து வருகிறது...!
டோக்லாம் எல்லையில் கட்டிடங்கள் - நீண்ட சாலைகள்அமைத்துவரும் சீனா
புதுடெல்லி
டோக்லாம் எல்லைக்கு அருகே சீனா அமைத்துவரும் கட்டுமானங்களை இந்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள எல்லைக் கிராமங்கள் அனைத்தும் சீனவின் கோ திபெத் பயிற்சியின் ஒரு பகுதியாகும். டோக்லாம் பகுதியில் இருந்து 9 கிலோ மீட்டருக்கு அப்பால் பூடான் எல்லையில் சீனா புதிய கிராமங்களை அமைத்து வருகிறது.
அங்கு ஏராளமான கட்டிடங்கள், புதிய பாலம் மற்றும் நீண்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் தெளிவாக காட்டுகின்றன.
சீனாவின் நோக்கம் 3488 கிமீ கோடு முழுவதும் அதன் எல்லைகளை ஒருங்கிணைப்பதாகும்.
Related Tags :
Next Story