கப்பலில் இருந்து செலுத்தி வெற்றிகரமாக ஏவுகணை சோதனை
தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது
பலசோர்,
தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது. அந்த ஏவுகணை நேற்று கப்பலில் இருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் கப்பலில் இருந்து அந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த விமானம் போன்ற வான்இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. சோதனை வெற்றிகரமாக நடந்ததையொட்டி, விஞ்ஞானிகளுக்கும், கடற்படைக்கும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். விமான அச்சுறுத்தலில் இருந்து கடற்படை கப்பல்களுக்கு இந்த ஏவுகணை பாதுகாப்பு அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story