உத்தரகாண்டில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி
இந்தியாவும், அமெரிக்காவும் ‘யுத் அப்யஸ்’ என்கிற பெயரில் ஆண்டுதோறும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
புதுடெல்லி,
உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் 'யுத் அப்யஸ்' என்கிற பெயரில் ஆண்டுதோறும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கூட்டு ராணுவப் பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று தொடங்கியது. இது இருநாட்டு ராணுவங்களுக்கு இடையிலான 18வது கூட்டுப்பயிற்சி ஆகும்.
அமெரிக்க ராணுவத்தின் 11-வது வான்வழி பிரிவை சேர்ந்த வீரர்களும், இந்திய ராணுவத்தின் அசாம் படைப்பிரிவை சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ள இந்த கூட்டுப்பயிற்சி தொடர்ந்து 2 வாரங்களுக்கு நடைபெறுகிறது.
இருநாட்டு ராணுவங்களுக்கு இடையிலான செயல்திறன், ஒத்துழைப்பு, புரிந்துணர்வு உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story