பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வல்லரசு நாடாக உருவாகும் - யோகி ஆதித்யநாத்
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வல்லரசு நாடாக உருவாகும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டம் சார்நாத் பகுதியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், இந்தியா வல்லரசு நாடாக உருவாகி வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வல்லரசு நாடாக உருவாகும். இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்குவதில் அனைவரும் பங்களிப்பு அளிக்க வேண்டும்.
இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும்.
135 கோடி மக்களுக்கும் ஒன்றிணைந்து பணியாற்றினால் விரைவில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும்' என்றார்.
Related Tags :
Next Story