அமெரிக்காவில் பசியால் வாடும் ஐதராபாத் மாணவிக்கு உதவி இந்திய தூதரகம் உறுதி


அமெரிக்காவில் பசியால் வாடும் ஐதராபாத் மாணவிக்கு உதவி இந்திய தூதரகம் உறுதி
x

உடனடியாக அவர் தன்னுடைய மகளை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மவுலாலி பகுதியை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகள் சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி. இவர் எம்.எஸ். மேல் படிப்புக்காக கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோவுக்கு சென்றார். அங்கிருந்து தினமும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்தார்.

இந்நிலையில் லுலூ 2 மாதங்களாக தாயை தொடர்பு கொள்ளவில்லை. இதனிடையே சிகாகோ தெருக்களில் உடைமைகளை இழந்து பசியோடு, மனநிலை பாதித்தவர் போல் லுலூ சுற்றி திரிகிறார் என்ற அதிர்ச்சி தகவல் பாத்திமாவுக்கு கிடைத்தது.

உடனடியாக அவர் தன்னுடைய மகளை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். மேலும், தெலுங்கானா அரசும் இதில் தலையிட்டு மகளை அமெரிக்காவில் இருந்து மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்-மந்திரிக்கு கோரிக்கை விடுத்தார். லுலூவின் நிலை குறித்த தகவல் இந்திய தூதரகத்துக்கு கிடைத்தது. உள்ளூர் போலீஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் துணையுடன் அவரை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அவருக்கு வேண்டிய மருத்துவ ரீதியான உதவி உள்பட அனைத்து உதவியும் வழங்கப்படும் என இந்திய துணை தூதரகம் உறுதி அளித்து உள்ளது.


Next Story