இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி!


இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி!
x

கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களில் இந்த நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.

புதுடெல்லி,

ரெயில்வே துறை திடீரென 200க்கும் மேற்பட்ட ரெயில்களை கனமழை, பாதை பராமரிப்பு மற்றும் போராட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்துள்ளது.

இன்று(17/072022) அறிவித்துள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கனமழை, பாதை பராமரிப்பு மற்றும் போராட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக 246 ரெயில்களை ரத்து செய்வதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களில் இந்த நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், நாட்டின் சில மாநிலங்களில் பராமரிப்பு மற்றும் கனமழை காரணமாக பல பயணிகள் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்சி.டி.சி குறிப்பிட்டுள்ளது.

பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக மொத்தம் 203 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது. 43 ரெயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தகவல் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி-என்சிஆர் பகுதியில் இன்று கனமழை பெய்து வருவதால் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்று செர்லபள்ளி ரெயில் நிலையம் மற்றும் பிற நிலையங்களில் இருந்து செகந்திராபாத் ரெயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் ரெயில்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

எனினும், ரெயில் சேவையை விரைவில் தொடங்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.


Next Story